பசில் தான் ரணில், ரணில் தான் பசில், நாங்கள் அவருக்கு ஆதரவு இல்லை

0
213

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதன் மூலம் நாடு எதிர்பார்க்கும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டுக்கு ஒரு பிரதமர் தேவை என்றும், ஆனால் ரணில் விக்கிரமசிங்க மாதிரியான பிரதமரை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ரணில் விக்ரமசிங்கவும் தான் காரணம் எனத் தெரிவிக்கும் விமல் வீரவன்ச, அவர் அமைக்கும் அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என 11 சுயேச்சைக் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரணில் டை கோட் அணிந்த பசில் ராஜபக்ச என்றும், பசில் ராஜபக்ச தாவணி அணிந்த ரணில் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here