அரசியல் பழிவாங்கல், பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்குள் தீர்வு – சஜித்

0
142

அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்ட சுமார் 60,000 பேருக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததும், முதல் ஆறு மாதங்களுக்குள் நடைமுறை ரீதியான தீர்வுகளை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படும் அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் மாவட்ட மட்டத்திலான மாநாட்டுத்தொடரில் கம்பஹா மாவட்ட மாநாட்டில் இன்று (26) கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

இரண்டு தடவைகள் மட்டுமே ஆட்சிக்கு வந்த போதிலும்,தாம் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கிட்டத்தட்ட 60,000 பேர் அரசியல் பழிவாங்கலுக்கு ஆளானார்கள் எனவும், தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்து போதும், தேர்தல் காலம் நெருங்கும் போதும் அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்குவதாக கூறினாலும், இதுவரையில் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தான் வீடமைப்பு நீர்மானத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கு 90 வீதமான கோரிக்கைகள் மற்றும் முறையீடுகளுக்கு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் தீர்வு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவ்வாறே இப்பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவிப்பதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விசேட மாநாடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றதோடு, இதில் அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்ட ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here