கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரியின் நடராஜர் அரங்கில் நேற்று (30) திகதி இடம் பெற்றது. தேசிய கொடியேற்றி தேசிய கீதம் இசைத்து பாண்ட் வாத்திய இசை முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.பாடசாலையின் அதிபர் நவகீதா தர்ம சீலன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஆன்மிக அதிதியாக ராமகிருஸ்ணன் மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் கலந்து கொண்டதுடன் பிரதம விருத்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளீதரன் கலந்து கொண்டார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்ற, பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவிகளுக்கு இதன்போது பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இப்பாடசாலை மாணவிகள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 95% சித்தியை பெற்று உயர் தர கற்கை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு கல்வியூட்டிய ஆசிரியர்களுக்கும் இதன் போது அதிதிகளினால் கெளரவம் வழங்கப்பட்டதுன் பாடசாலை மாணவிகளினால் கண்கவர் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி.சா ரவிராஜ் மற்றும் உயரதிகாரிகள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.