லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று காலை அதிகரிக்கப்பட்டதாக அறிவிப்புகள் வெளியான நிலையில் தற்போது லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4740 ரூபாய் ஆகும். 5 கிலோ கிராம் எரிவாயுவின் விலை 305 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1900 ரூபாய் ஆகும்.
இன்று முதல் இவ்விலைத் திருத்தம் அமுல் ஆகுவதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அதன் புதிய விலை 4,250 ரூபாவாகவும், 05 கிலோகிராம் சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 1,707 ரூபாவாக காணப்படுகின்றது.
2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபாவாகும்.