குறி தவறிய துப்பாக்கிச் சூடு

Date:

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்துள்ளது. 

களுத்துறை மாநகர சபை வேட்பாளரை இலக்கு வைத்து நேற்று (07) இரவு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அது குறி தவறியதால் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்தவர் களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் பந்துல பிரசன்ன என்பவராவார். 

இவரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. 

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, பிஸ்டல்களுக்குப் பயன்படுத்தப்படும் உயிருள்ள தோட்டா ஒன்றும், கைப்பேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...