விபத்து காரணமாக இந்த ஆண்டு 2,419பேர் மரணம்

Date:

2021 ஆம் ஆண்டில் இதுவரை காலத்தில் நாடு முழுவதும் இடம்பெற்ற  வாகன விபத்துக்கள் காரணமாக 2 ஆயிரத்து 419 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 27 ஆம் திகதி வரை இடம்பெற்ற வாகன விபத்துக்களை அடிப்படையாக கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த காலப் பகுதியில் நாடு முழுவதும் நடந்த கோர விபத்துக்களில் 2 ஆயிரத்து 325 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 697 பேர் பாதசாரிகள். 901 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்கள் என்பதுடன் 152 பேர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலப் பகுதிக்குள் நாடு முழுவதும் நடந்த வாகன விபத்துக்களில் 13 ஆயிரத்து 469 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 ஆயிரத்து 263 பேர் படுகாயமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 216 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....