புதுவருட விபத்துக்களில் 200 பேர் வைத்தியசாலையில்

0
228
Cropped shot of an unrecognizable doctor holding a stethoscope

2023 புத்தாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட பல்வேறு விபத்துக்களால் கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(31) நள்ளிரவு முதல் தற்போது வரை இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here