“நீதி” திட்டத்திற்கு தகவல் வழங்க பொது மக்களுக்கு வாய்ப்பு

0
127

“நீதி” செயற்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் போது மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக 071 859 88 00 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு தொலைபேசி இலக்கம் அடங்கிய ஸ்டிக்கர்களை விநியோகிக்கும் நிகழ்வு பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தலைமையில் இன்று (02) இடம்பெற்றது.

இந்த ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மேற்கு டிஐஜி அலுவலகம் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, “நீதி” நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here