கோயில் சிலைகள் உடைக்கப்பட்டதால் அக்கரபத்தனை நகரில் பதற்றம்!

0
228

டயகம – அக்கரப்பத்தனை நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சிலைகள் மற்றும் விக்கிரகங்கள் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த கோவிலில் இம்மாதம் கும்பாபிஷேகம் நடக்கவிருந்த நிலையிலேயே இனந்தெரியாத விஷமிகள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து அக்கரபத்தனை நகரில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. வர்த்தகர்கள் கடைகளை மூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here