நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது என்பதே தற்போதைய பிரச்சினை எனவும் அதனை ஒரு அரசியல் கட்சியினால் செய்ய முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (03) புத்தாண்டு பணிகளை ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபை எதிர்வரும் 8ஆம் திகதி கூட்டப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்காலத்தில் வலுவான கூட்டணி கட்டியெழுப்பப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.