பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் விரவம்ச இன்று (03) நிதிக் குற்றப்பிரிவுக்கு (FCID) வருகை தந்தார்.
2022 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் போது, பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் தொடர்பில் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டிருந்த நிலையில், இன்று அவரிடமிருந்து அந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச அமெரிக்காவில் வேலை செய்யவில்லை என்றும், அப்போது இலங்கையில் பணிபுரிந்தவர் என்பதால், அவர் இலங்கையில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் இருக்க வேண்டும் என்றும் வீரவன்ச குற்றம் சாட்டினார்.
இதன்படி, பசில் ராஜபக்ஷவின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் தன்னிடம் உள்ள அனைத்து எழுத்து மூலமான ஆதாரங்களையும் நிதிக் குற்றப் பிரிவினரிடம் கையளித்ததாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் உண்மையில் திருடர்களை பிடிக்க வேண்டுமானால் பயனற்ற அரிசி ஈக்களை பின் தொடராமல் உண்மையான திருடர்களை பிடிக்க முடியும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான அமெரிக்காவின் சொத்துக்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டால் திருடர்கள் யார் என்பதை நாட்டுக்கு நிரூபிக்க முடியும் என வீரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் இன்று சட்டத்தரணியாக திரு.விமல் வீரவன்சவுடன் நிதிக் குற்றப்பிரிவுக்கு வந்திருந்தார்.