சமகி ஜனபலவேகய கட்சி தொடர்பில் எடுக்கப்படும் முக்கிய தீர்மானங்கள் எதுவும் கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கும் எவருக்கும் தெரியாது எனவும், அவை பதவிகளை வகிக்காதவர்களால் எடுக்கப்படுவதாகவும் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தொடருமானால் கட்சியின் ஒரு குழு கட்சியை விட்டு வெளியேறும் அபாயம் இருப்பதாக இணைய சேனலுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பில் கட்சியின் தலைவர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை எனவும், இறுதிப் பொறுப்பை கட்சித் தலைவரும் செயலாளர் நாயகமும் சுமத்துவது ஏன் தமக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சமகி கூட்டணியில் ஒன்றிணைந்த கட்சிகளுடன் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு உடன்படிக்கையோ, உடன்படிக்கை ஆவணத்தையோ, கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் தானோ அல்லது உயர் அதிகாரிகளோ காணவில்லை எனவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளமை விசேட அம்சமாகும்.