யாழிற்கு ஜனாதிபதி விஜயம்: மூவர் கைது

0
77

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மாவட்ட செயலகத்துக்கு அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (04)உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here