வெலிகம, கப்பரதோட்டை, வள்ளிவல வீதியில் இன்று (டிசம்பர் 04) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்களால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெலிகம, பன்சல வத்த, ஜோதி கொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர் வெலிகம வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு டி 56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.