ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 12ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.