நியமனம் முதல் ஒரே செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள்

Date:

யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பணியாற்றுவதா   தெரிவிக்கின்றனர்.

யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களில் 20 வருடங்களைத் தாண்டிய 6 அலுவலக உதவியாளர்கள் (பியோன்) பணிபுரிவதாக  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் 3 பேர் 21 வருடங்களும்,  ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் ஒருவர் 27 வருடங்கள், சங்கானை, சாவகச்சேரி  பிரதேச செயலகங்களில் தலா  ஒருவர் 22 வருடங்கள்,  பணியாற்றுகின்றார்கள்.

5 வருடங்களைத் தாண்டி 20 பேர் பிரதேச செயலகங்களில் பணியாற்றுகிறார்கள். கோப்பாய் பிரதேச செயலகத்தில் 5 பேர்,  நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒருவர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 4 பேர், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் 4 பேர்,  ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் 2 பேர், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 2 பேர், சங்கானை பிரதேச செயலகத்தில் ஒருவர், உடுவில் பிரதேச செயலகத்தில் ஒருவர் பணியாற்றுகின்றார்கள்.

இடமாற்றமின்றி பணியாற்றுவதால் அந்த அலுவலகங்களை தமது உரிமை இடமாக எடுத்துக் கொள்வதாக தேவை கருதி பிரதேச செயலகங்கள் செல்லும் மக்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...