பரந்தனில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனிற்கு நீதி வேண்டிப் போராட்டம்

Date:

கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனிற்கு நீதி கோரி பரந்தன் சந்தியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பரந்தன் சந்தியில் புது ஆண்டு தினத்தில்
குணரட்னம் கார்த்தீபன்  என்னும் 24  வயதுயுடை, 13 ஆம் ஒழுங்கை  முல்லைவீதி பரந்தன் என்னும் முகவரியுடைய  இளைஞன் மீது  வன்முறைக் கும்பல் ஒன்று   தாக்குதல் நடாத்தி படுகொலை செய்த்தோடு மேலுமொருவர் படுகாயமடைந்தார்.

உயிரிழந்த இளைஞன் மீது  போத்தலினால் குத்தியதன் காரணமாக  உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றபோதும் இதுவரை எவருமே கைது செய்யப்படவில்லை என உறவுகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இதனால் உயிரிழந்த இளைஞனின்  இறுதிக் கிரிகை இன்று இடம்பெறவுள்ள அதே நேரம் இன்று காலையே வைத்தியசாலையில் இருந்தும்  உடல் வீட்டிற்கு எடுத்து வரப்படவுள்ளது. இதன்போது  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து பரந்தன்  சந்திக்கு எடுத்து வரும் சமயம்  பரந்தன் சந்தியில் ஆரப்பாட்டம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டியும் கொலையுடன் தொடர்பு பட்டோரை பொலிசார்  கைது செய்யுமாறும் கோரிக்கை விடும் வகையில் பரந்தன் சந்தி வர்த்தக நிலையங்களும் மரண நிகழ்வின்போது துக்கத்தை வெளிப்படுத்தி கதவு அடைப்பு இடம்பெறவுள்ளது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல வில்லன் நடிகர் மறைவு

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக்...

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை...

14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில்...

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...