யாழில். பொதுமக்கள் மத்தியில் மருத்துவக் கழிவை எரித்த வைத்தியசாலைக்கு 70 ஆயிரம் ரூபா தண்டம்.

0
177

யாழ்ப்பாணம் பரேமேஸ்வராச் சந்தியில் அமைந்துள்ள  தனியார் வைத்தியசாலை தமது வைத்தியசாலைக் கழுவுகளை  இரகசியமாக தீயிட்டதற்கு 70 ஆயிரம் ரூபா குற்றப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.

பரமேஸ்வராச் சந்தியில் உள்ள தனியார் வைத்தியசாலை தமது வைத்தியசாலையின் நீண்ட கால மருத்துவக் கழிவுகளை டிசம்பர் 25 ஆம் திகதி பல்கலைக் கழக சூழலில் வெற்றுக் காணியில் கொட்டி தீ வைத்த சமயம் மாநகர சபையால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் 2022-01-03 இன்று பொதுச் சுகாதார அதிகாரி உதயபாலாவினால் யாழ்ப்பாணம்  மேலதீக நீதவான் நீதமன்றில் 7 குற்றச் சாட்டின் கீழ்  தனியார் வைத்தியசாலைக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதீக  நீதவான் நளினி சுபாகரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது எதிராளி தரப்பு சட்டத்தரணியாக சட்டத்தரணி மு.றெமீடியஸ் ஆயரானதோடு எதிரி குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் 7 குற்றங்களிற்கும் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபா குற்றப் பணம் செலுத்த வேண்டும். குற்றப்பணத்தை செலுத்த தவறினால் 7 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் கட்டளையிட்டதோடு
இனிமேல் இவ்வாறு எரியூட்டக் கூடாது என  கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here