Tuesday, April 23, 2024

Latest Posts

வல்வெட்டித்துறையில் நடாத்தப்படவுள்ள பட்டத்திருவிழா அம் மண்ணுக்குரிய பெருமையுடன் நடாத்தப்பட வேண்டும்.சாள்ஸ்-எம்.பி

எதிர்வரும் தைப்பொங்கல் தினமன்று வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களின்னால் தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற உள்ளமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த பட்ட திருவிழாவானது வல்வெட்டித்துறை மண்ணுக்குள்ள பெருமையுடன் நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. நீண்ட இனவழிப்பையும் தமிழர்களது பூர்வீக நிலங்களை முறையற்ற விதத்தில் பறிப்பதும் என கொடூர ஆட்சி நடத்தும் இந்த இந்த அரசாங்க அமைச்சர்களின் பிரசன்னத்துடன் அவர்களின் அனுசரணையுடன் நடைபெறுவது வல்வெட்டித்துறை மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகம்.எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் எழுத்துமூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் 2009ஆம் ஆண்டு இனப்படுகொலையை நடத்திய ராஜபக்ச குடும்பத்தினரை பிரதம விருந்தினராக அழைத்து இந்த பட்டத் திருவிழா நடத்துவது 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையை சர்வதேச அரங்கிலிருந்து இல்லாது செய்வதற்குரிய அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கையே இது.
நீண்டகாலமாக மனித உரிமை செயற்பாட்டாளர்களினால்  எதிர்பார்த்திருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் முயற்சி வீண் போகும் வகையில் இந்த செயற்பாடு சர்வதேசத்தினுடைய பார்வை இனப்படுகொலை புரிந்தவர்களை அழைத்து இந்த பட்டத்திருவிழாவை நடாத்துவதானது சர்வதேச அரங்கிலிருந்து  இலங்கை அரசாங்கத்தை தப்பிப்பதற்கு உரிய சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்கும்.ஆகவே  ஏற்பாட்டாளர்கள் இதை கவனத்தில் கொண்டு பட்டத்திருவிழா அரசியல் கலப்படமற்றவகையில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.உடனடியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த புதிய நடைமுறையை கைவிட்டு இந்த மண்ணில் காலா காலமாக நடைபெற்று வரும் பட்டத் திருவிழா போன்று இம்முறையும் நடைமுறைப்படுத்த முன்வருமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.