ஆளுநர் செந்தில் தலைமையில் நாளை திருமலையில் கலைகட்டவுள்ள ஜல்லிக்கட்டு!

Date:

இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திருகோணமலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும் புள்ளியில் ஒன்றாய் கைகோர்த்து தங்கள் வேட்கையை வெளிப்படுத்துகின்றனர்.

தைப்பொங்கல் நெருங்க நெருங்க காளைகளும், மாடுபிடி வீரர்களும் வாடிவாசலில் இறங்கும் நாளை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் கடந்த ஆண்டு திருச்சிக்கு விஜயம் செய்து இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் நாளை (ஜன.6) முதல் ஒரு வாரம் பொங்கல் விழா நடைபெற உள்ளது.

விழாவின் முதல் நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி நாளை (ஜன.6) காலை 10 மணிக்கு திருகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 200 காளைகளும் 100-க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திருகோணமலை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...