சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சேபால் அமரசிங்கவுக்கு விளக்கமறியல்!

0
209

புனித தலதா மாளிகை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சேபால் அமரசிங்கவை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமரசிங்க நேற்று (05) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று (06 ஜனவரி) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கண்டியில் உள்ள புனித பல்லக்கு ஆலயம் தொடர்பில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை வெளியிட்டிருந்த அவர் நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அமரசிங்க அளித்த வாக்குமூலங்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துப்பூர்வ முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதால், அமரசிங்க கைது செய்யப்பட்டார்.

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளான அதி வண.திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அதி வண.வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர், ஆகியோர் இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அமரசிங்கவின் அறிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டதுடன், இந்த விடயத்தை முளையிலேயே கிள்ளி எறிய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது என அமரசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here