Thursday, January 16, 2025

Latest Posts

வன்னியில் ஜனாதிபதியை சந்திக்க முயன்ற தாய்மார் கைது

வன்னியில் ஜனாதிபதியை சந்திக்க முயன்ற தாய்மார் கைதுபுதிய ஆண்டில் வன்னிக்கு வந்த ஜனாதிபதியை சந்திக்க முற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி உட்பட இரு தாய்மார்களை பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.

வடக்கிற்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனவரி 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து விமானம் மூலம் வவுனியா வந்தடைந்தார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற  கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்து நகர மண்டபத்திற்கு அருகில் வந்தவர்களை பொலிஸார் தடுத்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலாளர் சிவானந்தன் ஜெனிற்றா ஜனாதிபதியை சந்திக்க விரும்புவதாக கூறி நகரசபைக்கு சென்று கொண்டிருந்த போது பொலிஸார் அவரை தடுத்து பஸ்ஸில் ஏற்றிச் சென்றனர்.

இதன்போது அவருடன் இருந்த அதே சங்கத்தைச் சேர்ந்த மீரா ஜஸ்மின் சார்லஸ்னைஸ் என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

போராட்டங்கள் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில், சிவானந்தன் ஜெனிற்றாவுக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி 2,500 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் தாய்மார்கள், பதினான்கு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன தமது அன்புக்குரியவர்களுக்கு நியாயத்தை கோருகின்றனர்.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களைத் தேடி வடக்கு, கிழக்கில் 2,500 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் முன்னணி உறுப்பினர்களின் தகவல்களுக்கு அமைய, நீதி கிடைக்காமல் உயிரிழந்த பெற்றோரின் எண்ணிக்கை 190ற்கும் அதிகமாகும்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.