கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விசாரணையின் பின்னர் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் கைத்தொழில் மற்றும் விவசாயத்திற்காக காணி விடுவிக்கப்பட்ட போதிலும் கடந்த காலங்களில் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
“அமைச்சரவை ஒரு முடிவை எடுத்தது, 2015 முதல் நில சீர்திருத்த ஆணையத்தால் யாருக்கு நிலம் வழங்கப்பட்டது? என்ன திட்டங்களுக்கு? எந்த அடிப்படையில்? விசாரணை முடியும் வரை LRC மூலம் நிலம் ஒதுக்கீடு செய்வதை நிறுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த விசாரணையை நடத்தி இந்த காணிகள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது, இதில் ஊழல் நடந்துள்ளதா என்பதை கண்டறிய நடவடிக்கை எடுப்போம் என நம்புகிறோம்” என்றார்.