இன்றும் அடிக்கடி மின்தடை

Date:

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றைய தினமும் (07) இடைக்கிடையில் மின்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் ஒன்று பழுதடைந்துள்ளதாலும் மற்றும் அதிக மின்சார தேவையினாலும் இவ்வாறு மின்தடை ஏற்படக்கூடும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்றிரவு கொழும்பு உட்பட பல பகுதிகளில் மின்சார விநியோகம் பல தடவைகள் தடைப்பட்டது.

இரவு 9.30 மணியளவில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் அமைப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...