தேர்தலை நடத்த தேவையான பணம் இன்னும் கிடைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

Date:

வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை இறுதி நிமிடத்திலாவது ஒத்திவைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் இன்னமும் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணம் இன்னும் திறைசேரியில் இருந்து பெறப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வேட்புமனுக்கள் கோரப்பட்டதன் பின்னர் திறைசேரியில் இருந்து தேவையான தொகை கிடைக்கும் என நம்புவதாகவும், தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...