வரி பதிவு இலக்கத்தைப் பெற இலகுவான வழி

0
179

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்களின் ஊடாக அதனைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

“உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று உங்களின் தேசிய அடையாள இலக்கத்தைக் குறிப்பிடுவதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் TIN இலக்கத்தைப் பெறலாம். அதை இலகுவாக்க பிரதேச செயலகங்கள் மூலம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் திங்கட்கிழமை கலந்துரையாடவுள்ளோம்.

“இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று நம்புகிறேன். வரி செலுத்துவதில் சுமை இல்லை. பலர் பயப்படுகிறார்கள். மாத வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்.

“எவ்வாறாயினும், வரி ஏய்ப்பு செய்யும் பாரிய வர்த்தகர்களை பாதுகாப்பதன் மூலம் அரசாங்கம் அநியாயமாக வரிகளை வசூலிப்பதாக கட்சி பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், வரி அடையாள இலக்கத்தை (TIN) பெறுவதற்கு மக்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வருகை தந்ததைக் காண முடிந்தது” என, இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here