ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கொள்வனவு

Date:

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை இடையறாது தொடர்வதற்காக ரஷ்யாவிலிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இலங்கைக்கான ரஷ்ய தூதர் Levan S. Dzhagaryan மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் அவசர சந்திப்பு நேற்று (13) மதியம் அமைச்சகத்தில் நடைபெற்றது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் சிக்கல்களுக்கு மாற்றுத் தீர்வாக ரஷ்ய எண்ணெயை கொள்முதல் செய்ய முன்பு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதையடுத்து இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ளும் நோக்கில் ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இலங்கையின் இந்த கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்கு அறிவிப்பதாக ரஷ்ய தூதர் ஒப்புதல் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கு தேவையான எந்த நேரத்திலும் ரஷ்யாவின் ஆதரவு கிடைக்கும் என ரஷ்ய தூதர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அணில் ஜெயந்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா உள்ளிட்ட அமைச்சக செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...