இன்று 07 முதல் 13 வரை விசேட டெங்கு தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில், எண்பத்தெட்டாயிரத்து முந்நூற்று தொண்ணூறு (88, 303) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதில் ஐம்பத்தெட்டு பேர் இறந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் பதினோராயிரத்து தொள்ளாயிரத்து பத்து (11,910) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் டெங்கு நோய் பரவும் சூழ்நிலை உருவாகலாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் குப்பைகளை நீர் தேங்கும் இடங்களில் அப்புறப்படுத்த வேண்டாம் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.