Friday, May 3, 2024

Latest Posts

2023ஆம் ஆண்டில் நகை ஏற்றுமதி மூலம் 1 பில்லியன் டொலரை வருமானமாக ஈட்ட அரசாங்கம் முயற்சி!

2023 ஆம் ஆண்டில் நகை ஏற்றுமதியில் இருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது உள்ளூர் இரத்தினக் கற்களின் பெறுமதி சேர்ப்பிற்கு உதவுவதாக கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற FACETS இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியின் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் பத்திரன, இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில்துறைக்கான அரசாங்கத்தின் திட்டங்களை விரிவாகக் கூறினார்.

“மதிப்புக் கூட்டல் தொடர்பான அனைத்து தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களும் வரியற்றதாக இருக்கும். இரத்தினக்கல் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அது தொடர்பான பிற தொழில்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை எளிதாக்குவதற்கு ஒரு குழுவும் நியமிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

உலகளாவிய கொள்வனவு மற்றும் ஆதார நாட்காட்டியில் சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணக் கண்காட்சிகளில் ஒன்றான FACETS ஸ்ரீலங்கா பிரீமியர் பதிப்பானது கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் திறந்து வைக்கப்பட்டது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள FACETS ஸ்ரீலங்கா, வணிகத்திற்கு இலங்கை தயாராக உள்ளது மற்றும் திறந்திருப்பதைக் குறிக்கிறது.

SLGJA இன் தலைவர் அஜ்வர்ட் டீன் தனது வரவேற்பு உரையில், இலங்கை அரசாங்கம் தொழில்துறையை முக்கிய அந்நிய செலாவணி சம்பாதிப்பவராக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறினார். “இந்தத் தொழில்துறையின் எதிர்காலத் தொடர்ச்சிக்கு அரசாங்கம் ஒரு உதவியாளராக இருக்க வேண்டும்.

சமீபகாலமாக நீக்கப்பட்ட சலுகைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த ஆண்டு கண்காட்சியின் மையத்தில் உள்ள பொது-தனியார் துறை கூட்டாண்மை, தொழில்துறைக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் பயனளிக்கும் ஒரு கூட்டுக்கு சான்றாக நிற்கிறது.

தலைவர் FACETS Sri Lanka அல்தாப் இக்பால் கண்காட்சி பற்றி இரண்டு விடயங்களை வலியுறுத்தினார்; இலங்கை வர்த்தகத்திற்கு தயாராக உள்ளது மற்றும் திறந்த நிலையில் உள்ளது என்பதை உலகிற்கு இந்த கண்காட்சி உணர்த்துகிறது என்பதும், திடமான மற்றும் செயல்படும் பொது-தனியார் கூட்டாண்மைக்கு இதுவே முதல் உதாரணமாகும் என கூறியுள்ளார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.