ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைக் கட்டியெழுப்பும் சவாலுக்கும் நாட்டைப் பாதுகாக்கும் சவாலுக்கும் தலைமையேற்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அந்த சவாலை எப்படி சமாளிப்பது என்பது குறித்து நீண்ட விவாதம் நடத்தப்படும் என்றும் இளம் அரசியல் தலைவருக்கு முதிர்ச்சியடைய இதுவே சிறந்த சந்தர்ப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் எந்த தேர்தலுக்கும் தாம் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலமான அரசியல் சக்தியாக பலப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.