வவுனியாவில் அதிகரித்து வரும் போதை ஆசாமிகளின் அட்டகாசம்

0
66

வவுனியா நகரப்பகுதியில் மது போதையில் இளைஞர் குழு ஒன்று தனியார் நிறுவன ஊழியரை தாக்கியதில் குறித்த ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பகல் (08.01) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்,

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருப் பகுதியில் மது அருந்திவிட்டு வந்த இளைஞர் குழு ஒன்று பணம் தருமாறு கேட்டு வீதியில் நடந்து சென்ற முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் நிறுவன ஊழியரை மிரட்டியதுடன் பணம் கொடுக்க மறுத்ததால் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

குறித்த குழுவினர் இரண்டுக்கு மேற்பட்ட தடவை தாக்குதலை நடத்திய பின்னர் முற்சக்கர வண்டியில் தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் வாகன இலக்கத்துடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இவ்வாறான போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.

வியாபார நிலையங்கள் அதிகமுள்ள மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் அதுவும் பகல் வேளைகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பொதுமக்களுக்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here