வலுவான, சுயாதீனமான நிறுவனங்களே நீண்ட கால நிலையான வளர்ச்சிக்கான அடித்தளம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) ஏற்பாடு செய்திருந்த ‘தெற்காசியாவின் நெகிழ்ச்சியான வளர்ச்சிக்கான பாதை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கையில் வலுவான நிறுவனங்கள் இல்லாத காரணத்தால், அனைத்து சமூக குறிகாட்டிகளிலும் இலங்கை பின்னோக்கி நகர்ந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையானது துண்டு துண்டாக சிதறுவதை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கை போன்ற நாடுகள் துண்டாடப்படுவதால் அதிகம் பாதிக்கப்படுவதாக வலியுறுத்தினார்.
நாட்டிலுள்ள ஒரேயொரு சுத்திகரிப்பு நிலையம் ஈரானின் எண்ணெயில் இருந்து இயங்குவதாகக் குறிப்பிட்டுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க, அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அடுத்து இலங்கை தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
ரஷ்யா – உக்ரைன் யுத்தம் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக கச்சா எண்ணெயை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால், இலங்கையானது வர்த்தக தீர்வை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
N.S