நல்லூரில் தேசிய தைப்பொங்கல் விழா!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் சிவன் கோயிலில் இடம்பெறவுள்ளது.

நல்லாட்சி அரசின் காலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெற்றது. அதில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டபோதும் இறுதி நேரத்தில் அவர் பங்கேற்கவில்லை. அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிலையில் 8 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நல்லூர் சிவன் கோயிலில் பி.ப. 3 மணிக்கு பொங்கல் நிகழ்வு நடைபெறும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொங்கல் பானையில் அரிசியை போட்ட பின்னர், அங்கிருந்து துர்க்கா மணிமண்டபத்துக்கு மங்கல இசை முழங்க அழைத்துச் செல்லப்படுவார். அங்கு அரங்க நிகழ்வுகள் நடைபெறும்.

இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கலந்துகொள்வதற்கான அழைப்பு அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...