ஜப்பான் நிதி அமைச்சர் நாளைமறுதினம் இலங்கை வருகிறார்

0
223

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானின் நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி இலங்கை வரவுள்ளார்.

11 ஆம் திகதி இலங்கை வரும் ஜப்பானின் நிதி அமைச்சர் 12 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

மேலும் ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி மற்றும் அவரது தூதுக்குழு நாடாளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களை பார்வையிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here