வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த தாழமண்டல அழுத்தம் தொடர்பாக, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்புகளின் அடிப்படையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நான்கு மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு தொடர்பான விசேட அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த பகுதிகளில் மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாகக்கூடும் என அடையாளம் காணப்பட்ட இடங்கள், ஏற்கனவே மண்சரிவுக்கான முன்னறிகுறிகள் தென்படும் பகுதிகள், சரிவுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட மேடுகள் (embankments) அருகில் வசித்து வரும் மக்கள், இன்று (09) பிற்பகல் நேரத்திற்கு முன்னதாக அந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
