Saturday, October 5, 2024

Latest Posts

வெள்ளவத்தையில் இன்று திடீர் பரபரப்பை ஏற்படுத்திய உலகப் பிரபலம்! – வீடியோ

கொழும்பு- வெள்ளவத்தை சின்சபா வீதியில் இன்று பிற்பகல் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.

அந்த வீதியில் திடீரென ஆயுதம் தாங்கிய பொலிஸார் வாகனங்களுடன் குவிக்கப்பட்டனர்.

மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.

யுக்திய திட்டத்தின் கீழ் ஏதேனும் அவசர தேடுதல் நடத்தப்பட போகிறதா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கப்போகிறதா என்ற அச்சத்தில் பிரதேச மக்கள் இருந்தனர்.

இந்நிலையில் அந்த வீதிக்கு சொகுசு வாகன தொடரணி ஒன்று வந்தது. சொகுசு வாகனத்தில் பிரித்தானிய கொடி காணப்பட்டது.

வாகனத்தில் இருந்து ஒரு பிரபலம் பலத்த பாதுகாப்புடன் வெளியே வந்த பின்னரே அது பிரித்தானிய இளவரசி ஆன் என தெரியவந்தது.

இதனை உறுதிப்படுத்திய லங்கா நியூஸ் வெப் அலுவலக செய்தியாளர் ஏஞ்சலினா ரகுநாதன், குறித்த வீதியில் உள்ள Save The Children கொண்டு நிறுவனத்தின் 30 ஆண்டுகால சேவை பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நிகழ்வில் கலந்து கொள்ளவே இளவரசி ஆன் அங்கு வருகை தந்ததாக தகவல் பெற்றார்.

நிகழ்வின் பின் இளவரசி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வருடங்களைக் கொண்டாடும் வகையில் இளவரசி ஆனின் விஜயம் அமைந்துள்ளது.

இளவரசி ஆன் மறைந்த எலிசபெத் மஹாராணியாரின் இரண்டாவது மகளும் ஒரேயொரு பெண் வாரிசும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் ஒரே ஒரு சகோதரியும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.