கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரிய இனிப்புகள் மற்றும் பண்டிகைகளுடன் பாராளுமன்றத்துடன் பொங்கலைக் கொண்டாட பிரித்தானிய தமிழ் சமூகம் உங்களை நட்புடன் அழைக்கிறது.
இலண்டன் சட்டசபையால் (London Assembly) தை பொங்கல் மற்றும் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடனப்படுத்தியதை கொண்டாட பிரித்தானிய தமிழ் சமூகத்தால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தைப் பொங்கல் என்பது தமிழ் சமூகத்தின் பூர்வீக அறுவடைத் திருநாளாகும், இது பல நூற்றாண்டுகளாக பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. இன்று உலகத் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 02 டிசம்பர் 2021 அன்று London Assembly இனால் ஜனவரி மாதத்தினை தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதனை கொண்டாடுவதற்கும் மற்றும் பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்கும், இவ்வருடம் Westminister இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம் உங்களை பிரித்தானிய தமிழ் சமூகம் அழைத்து நிற்கின்றது.
இடம்: Central Hall Westminster, Storey’s Gate, London, SW1H 9NH திகதி: 17.01.2022
நேரம்: மாலை 6.00 மணி – மாலை 8.00 மணி
அனுமதி: இலவசம் – முற்பதிவு அவசியம்
முன்பதிவுகளிற்கு: https://www.eventbrite.com/e/pongal-in-westminster-2022-tickets-241748094057 இவ்விணைப்பினை அழுத்தி அல்லது பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்.
தொலைபேசி இலக்கங்கள்: 0791225341807737684104