தமிழகத்தில் அயலக தமிழர் விழா : இலங்கை பிரதிநிதிகளும் பங்கேற்பு

0
172

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் 11,12 ஆம் திகதிகளில் நடைபெறும் அயலக தமிழர் விழாவில், பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் பயணமாகியுள்ளனர்.

அதனடிப்படையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சென்னை நோக்கி பயணமாகியுள்ளனர்.

இதேவேளை, கனடாவின் ஒன்றாரியோ மாகாண சபையின் மார்க்கம்- தோர்ன்ஹில் தொகுதி உறுப்பினருமான லோகன் கணபதியும் குறித்த நிகழ்வில் பங்பேற்பதற்காக வருகை தந்துள்ளார்.

மூன்றாவது தடவையாக முன்னெடுக்கப்படும் இவ்விழாவை தமிழக அரசானது, தமிழக எல்லையைத் தாண்டி, பரந்துபட்டு சர்வதேசங்களிலும் வசிக்கும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் வகையில் கொண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here