மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி இரங்கல் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரங்கல் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததால் நடத்த முடியவில்லை.
கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மங்கள சமரவீர ஆகஸ்ட் 24ஆம் திகதி காலமானார்.