இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராக கனடாவினால் அண்மையில் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கண்டித்துள்ளார்.
இவ்வாறான விடயங்களைத் தீர்மானிப்பதற்கு கனடாவுக்கு இறையாண்மை உரிமை உண்டு என்பதை ஒப்புக்கொண்ட முன்னாள் அமைச்சர், இது தொடர்பான உண்மைகளை மதிப்பிடும் போது கனடா ஏற்றுக்கொண்ட வெளிப்படையான ‘இரட்டைத் தரங்கள்’ மற்றும் ‘மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு’ தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
“எல்.ரீ.ரீ.ஈ சிறுவர் போராளிகளை வேலைக்கு அமர்த்தியது. அனைத்து இனங்களையும் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கொன்றது. 3 தசாப்தங்களாக இந்த அட்டூழியத்தை அவர்கள் செய்துள்ளனர்.
1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதிகள் கோத்தபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச, இராணுவத்தின் ஸ்டாஃப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் மீது ஜனவரி 10 ஆம் திகதி கனேடிய அரசாங்கம் தடை விதித்தது.
இதன்படி, இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட நான்கு இலங்கையர்களும் கனடாவிற்குள் குடியேற்றம் அல்லது அகதிகள் பாதுகாப்புக்கு தகுதியற்றவர்கள் என கனடா அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது.
மேலும், அவர்கள் கனடா அல்லது அதன் குடிமக்களுடன் எந்தவிதமான பரிவர்த்தனைகளிலும் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நான்கு இலங்கையர்களும் கனடாவில் வைத்திருக்கக்கூடிய எந்தவொரு சொத்துக்களும் திறம்பட முடக்கப்படும் என்றும் கனேடிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்று (ஜனவரி 11), கனேடிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இலங்கையின் கடும் எதிர்ப்பை உத்தியோகபூர்வமாக பதிவு செய்ய, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேனியல் பூட்டை, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார்.
N.S