தேசியத் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் அவரை வெற்றிபெறச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதியின் தொழிற் சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு கூடி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவார் என இறுதித் தீர்மானம் எடுத்திருப்பதால், அது தொடர்பான பிரசாரங்கள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படும் என ரத்னப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி காலியில் முதலாவது வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காலி, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டக் கூட்டங்கள் நடாத்தப்பட்டு நாடு பூராகவும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என ரத்னப்பிரிய குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.