கொழும்பில் பல பகுதிகளுக்கு 16 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை (13.1.2024) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (14.1.2024) காலை 9 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.