இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் முகேஷ் அம்பானி

Date:

இலங்கை அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனத்தை விலைக்கு வாங்கும் திட்டத்தில் இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உள்ளது.

கடன் பிரச்சினையில் சிக்கியுள்ள இலங்கை அரசு தனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக இலங்கை அரசு பல துறைகளில் தனியார்மயமாக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இந்த வகையில் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎல்சியின் பங்குகளை விற்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

அதை வாங்க இந்திய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ளார்.

ரிலையன்ஸ் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இலங்கையின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎல்சியை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டியுள்ளது.

இது தொடர்பான தகவல் இலங்கை அரசால் பகிரப்பட்டுள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மேலும் இரண்டு நிறுவனங்கள் அதை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன.அந்த நிறுவனத்தை வாங்குவதற்கான விண்ணப்பங்களை 2023 நவம்பர் 10ஆம் திகதி இலங்கை அரசு கேட்டிருந்தது. அதற்கான காலக்கெடு 2024 ஜனவரி 12 அன்று முடிவடைந்தது.

விண்ணப்ப காலக்கெடு முடிவடைந்ததையடுத்து இதற்கான அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தவிர, கோர்ட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் மற்றும் பெட்டிகோ கொமர்சியோ இன்டர்நேஷனல் எல்டிஏ ஆகிய நிறுவனங்களும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க விண்ணப்பித்துள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஏர்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்கி வருகிறது. இந்நிலையில், இலங்கையிலும் தடம் பதிக்கும் முனைப்பில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....