நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனவரி 24ம் திகதியுடன் முடிவுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய நாடாளுமன்றக் காலப்பகுதியை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் முடிவுறுத்தபட்ட பின் உயர் அதிகாரிகள் நிலைகளுக்கான நாடாளுமன்றக் குழு, சிறப்புக் குழுக்கள் மற்றும் CORP, COPA உள்ளிட்ட துறைசார் கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட குழுக்கள் நீக்கப்பட்டு, அவற்றிற்குப் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.