சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு ஆகியவற்றின் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும் என, மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, இது தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என, மேற்படி குழுவின் தலைவர் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.