கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் கைதிகள் குழுவொன்று தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை செய்து தேவையான பரிந்துரைகளை வழங்கவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதன் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 03 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஐவரடங்கிய குழுவிற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஐந்து பேர் கொண்ட குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு
எம்.எஸ்.பி. சூரியப்பெரும
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம் மற்றும் காவல்துறை)
ஆர்.எஸ். ஹபு கஸ்வத்த
மேலதிக செயலாளர் (நிர்வாகம்) நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சகம்
பியுமந்தி பீரிஸ்
மேலதிக செயலாளர் (சட்டம்) நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சகம்
டி. எம் சமன் திசாநாயக்க
பாதுகாப்பு அமைச்சகத்தின் மேலதிக செயலாளர்