நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு தற்போதைய ஜனாதிபதியே பொருத்தமானவர் என்பது தமது தனிப்பட்ட நம்பிக்கை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நாடு பொருத்தமான தருணத்தில் இல்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதுபோன்ற பரிசோதனைகளுக்குச் செல்வது நாட்டை மேலும் அதலபாதாளத்திற்கு இட்டுச் செல்லும் என்று அவர் மேலும் கூறுகிறார்.