இனவாதிகளுக்கு பயமில்லை மலையக மக்களுக்கு விசேட அறிவிப்பு விடுத்தார் சஜித்!

0
205

இனவாதிகளுக்கு பயமில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் இனவாதத்தை மதவாதத்தை அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தைப்பொங்கல் வி​ழாவில் உரையாற்றிய சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தனது தந்தை ரணசிங்க பிரேமதாஸ மலையக மக்களுக்கு செய்த சேவைகளை விட அதிகம் தன்னால் செய்ய முடியும் என அவர் கூறினார்.

மலையக மக்களின் கல்வி, சுகாதார முன்னேற்றத்திற்கு எதிர்கட்சியில் இருந்து கொண்டு சேவையாற்றுவதை போல ஜனாதிபதியானதும் மலையக மக்களுக்கான விஞ்ஞாபனம் தயாரித்து மலையக அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியை உருவாக்க உள்ளதாக சஜித் பிரேமதாஸ கூறினார்.

இலங்கை நாட்டுக்கு இந்தியா வழங்கி வரும் நன்கொடை உதவிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here