இன்று (ஜனவரி 17) இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு (பனித்தூசி) ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
