வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு!

0
118

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று (ஜனவரி 18) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிறது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 21 அன்று நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் ஜனவரி 21 ஆம் திகதி உள்ளாட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வேட்பாளர்களின் தேர்தல் கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் பணி ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பமாகி ஜனவரி 20 அன்று நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.

29 அரசியல் கட்சிகளும் 52 சுயேச்சைக் குழுக்களும் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை உள்ளாட்சித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த காலப்பகுதியில், புதிய லங்கா சுதந்திரக் கட்சி (NLFP) கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தளை, நுவரெலியா, காலி, அம்பாறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு வைப்புத்தொகையை செலுத்தியதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கொழும்பு, களுத்துறை, மாத்தளை, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு காட்டுப்பாதை செலுத்தியுள்ளது.

இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் கொழும்பு, நுவரெலியா, காலி, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான வைப்புத்தொகையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) செலுத்தியுள்ளது.

மேலும், ஜனசத பெரமுன, சுதந்திர மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியனவும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று செலுத்தியுள்ளன.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here